வாய்ப்பு தேடி தெருத்தெருவாக அலைந்த முன்னணி காமெடி நடிகர் – கைதூக்கி விட்ட விஷ்ணுவிஷால்.., அந்த மனசு தான் சார் கடவுள்!!

0

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் இப்பொழுது இருக்கும் நவீன காலகட்டத்தில் போட்டிகளும் அதிகரித்து விட்டது. சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே யாரையுமே பிரபலமாகி விட முடியாது. திறமையும் அதே நேரத்தில் அதிர்ஷ்டமும் சேர்ந்தால் மட்டுமே நினைத்த இலக்கை அடைய முடியும்.

இப்பொழுது பிரபலமாக இருக்கும் நடிகர்களே ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்பது நமக்கே தெரியும். இப்படி இருக்க பிரபல காமெடி நடிகர் சினிமாவிற்கு வருவதற்குள் பட்ட கஷ்டங்கள் பற்றி இணையத்தில் செய்தி வெளியாகி உள்ளது. அது வேற யாரும் இல்லைங்க நம்ம முனீஸ்காந்த தான்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்து தற்போது காமெடியில் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் முனிஸ்காந்த். இப்படி மக்களை சிரிக்க வைத்த இவர், ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக கஷ்டப்பட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று எல்லா தயாரிப்பாளர்களின் ஆபிஸ்க்கு லோ லோனு என்று அலைந்துள்ளார். அவரின் விடா முயற்சியால் காதல் கிறுக்கன், தம்பிக்கோட்டை, ஆழ்வார் மற்றும் காளை போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

இதனை தொடர்ந்து எங்கயாவது ஒரு கதவு திறக்காத என்று அவர் ஏங்கி கொண்டிருந்த போது விஷ்ணு விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த முண்டாசுப்பட்டி படம் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். அதற்கடுத்து வரிசையாக முனிஸ்காந்துக்கு பாடங்கள் குவியத் தொடங்கியது. தற்போது முன்னணி காமெடி நடிகர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here