தமிழக மின் கட்டண உயர்வு.,,100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் “இந்த” நிலைதான்!!

0
தமிழக மின் கட்டண உயர்வு.,,100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால்
தமிழக மின் கட்டண உயர்வு.,,100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் "இந்த" நிலைதான்!!

தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின் வாரியம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக்களையும் கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதன் பேரில், கடந்த செப்.,10ம் தேதி முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இருப்பினும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு.,, கிளம்பிய பெரும் சர்ச்சை!!

இந்நிலையில் வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சார மானியத்தை வேண்டாம் என்று தானாக முன் வந்து, விட்டு கொடுப்பவர்கள் கூடுதலாக ரூ.450 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வர உள்ளதாக சொல்லப்படுகிறது. 100 யூனிட் இலவச மின்சார மானியத்தை விட்டுக்கொடுத்தல் 200 யூனிட்டுக்கு 675 ரூபாயும், 300 யூனிட்டிற்கு 1125 ரூபாயும், 400 யூனிட்டிற்கு 1576 ரூபாயும், 500 யூனிட்டுக்கு 2025 ரூபாயும் செலுத்த வேண்டிய நிலை வரும் என்று தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here