
“சந்திரயான் 3” வெற்றிக்கு பிறகு சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை ஆய்வு செய்ய “ஆதித்யா எல்1” விண்கலத்தை இஸ்ரோ விண்வெளி மையம் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக சூரியன் மிஷனை தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து நாளை (02.09.2023) காலை 11.50 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து PSLV-C57 ராக்கெட் உதவியுடன் “ஆதித்யா எல்1” விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் இன்று (01.09.2023) காலை 11.50 மணிக்கு தொடங்க இருப்பதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பவே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் மின்தடை.., லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?