
குக் வித் கோமாளி சீசன் 4ல் இருந்து விலகிய விசித்திரா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது அப்பா, அம்மா இறந்ததை குறித்து பேசியுள்ளார்.
நடிகை விசித்ரா
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் முத்து திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் விசித்ரா. மேலும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோரோடு பல படங்களில் நடித்த விசித்ரா கல்யாணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர் திடீரென விலகினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அவருடைய தாயார் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விலகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் விசித்ரா பேட்டியில் அப்பா அம்மா இறப்பை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, என்னுடைய அப்பா முகமூடி கொள்ளைக்காரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
என்னுடைய தந்தை ஒருவேளை கொள்ளைக்காரர்களை தடுத்து நிறுத்தி இருப்பார். இல்லை என்றால் அவர்களின் முகத்தை பார்த்திருப்பார். அதனால் தான் கொள்ளையர்கள் அப்பாவை கொலை செய்திருப்பார்கள் என்று கூறினார். அப்பா இல்லாத குறையை அம்மா தான் தீர்த்து வைப்பார். இப்போது அம்மாவும் இல்லை. என்னுடைய கவலைகளை பரிமாற எனக்கென்று யாரும் இல்லை. சொல்லப்போனால் அனாதையாக இருக்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.