மீண்டும் களமிறங்கும் சார்பட்டா பரம்பரை 2.., படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
மீண்டும் களமிறங்கும் சார்பட்டா பரம்பரை 2.., படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
மீண்டும் களமிறங்கும் சார்பட்டா பரம்பரை 2.., படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான “சார்பட்டா பரம்பரை” படத்தின் இரண்டாம் பாகம் குறித்து படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சார்பட்டா பரம்பரை:

இயக்குனர் பா.ரஞ்சித் படைப்பில் நடிகர் ஆர்யா நடித்து கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. அது போக இந்த படத்தில் துஷ்ரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கைன், ஷபீர் கல்லறக்கல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் அடுத்த பார்ட் வராதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களை குஷி படுத்தும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கொடூரமாக கொல்லப்பட்ட தந்தை.., உடல் நலம் சரியில்லாமல் இறந்த அம்மா.., நடிகை விசித்ராவின் பரிதாப நிலை!!

அதாவது பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளார் ஆர்யா. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here