சமந்தாவின் இதயத்தோடு நெருக்கமான அந்த நபர்.., நன்றி தெரிவித்து அவரே பதிவிட்ட இன்ஸ்டா பதிவு!!

0
சமந்தாவின் இதயத்தோடு நெருக்கமான அந்த நபர்.., நன்றி தெரிவித்து அவரே பதிவிட்ட இன்ஸ்டா பதிவு!!
சமந்தாவின் இதயத்தோடு நெருக்கமான அந்த நபர்.., நன்றி தெரிவித்து அவரே பதிவிட்ட இன்ஸ்டா பதிவு!!

இந்திய சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகி ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் சமந்தா. இவர் தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் புராணத்தில் உள்ள “சாகுந்தலம்” என்ற வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தா மற்றும் துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்திற்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் இதன் வெளியீடு வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளிவர உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினருடன் சேர்ந்து முதல் முறையாக இப்படத்தை பார்த்துள்ளார் சமந்தா. இந்த படம் குறித்து இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில உருக்கமாக வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது இப்படம் மிக அருமையாக உள்ளது. இதில் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை பார்ப்பவர்கள் நிச்சயமாக ரசிப்பார்கள். இப்படி ஒரு அழகான படத்தை எனக்கு கொடுத்த இயக்குனர் குணசேகரன் என் இதயத்தோடு நெருக்கமாகி விட்டார். மேலும் இப்படி ஒரு அற்புதமான படைப்பிற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் நீலிமா மற்றும் தில் ராஜுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here