
இயக்குனர் அட்லீ படைப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜவான் திரைப்படம்
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து, தற்போது முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து விஜய்யுடன் கூட்டணி வைத்து தோல்வியை தழுவாமல் வெற்றி அடைந்தது. அந்த வகையில் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்தார் அட்லீ.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இவர் இயக்கத்தில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். அதுபோக KGF புகழ் சஞ்சய் தத் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.
இதனை தொடர்ந்து இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறிய நிலையில், தேதி ஒத்திவைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தில் நடிக்க இருக்கும் சஞ்சய் தத், தற்போது விஜய் நடிக்கும் லியோ ஷூட்டிங் பிசியாக நடித்து வருவதால், ஜவான் ஷூட்டிங்-க்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஜவான் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் விஜய்க்கு எதிராக படத்தை இறக்க அட்லீ திட்டம் தீட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.