ஒரு வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் கண்டுபிடிக்கிறாங்க.., பிரபல நிகழ்ச்சியை வெளுத்து வாங்கும் பிரியா பவானி!!

0
ரெக்க மட்டும் இருந்தா தேவதை டா.. கியூட் லுக்கில் ரசிகர்களை கட்டி போட்ட பிரியா பவானி சங்கர்!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா ஷோவை குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு பதிவை குறிப்பிட்டுள்ளார்

நடிகை பிரியா பவானி சங்கர்:

தமிழ் சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து இப்பொழுது கோலிவுட் டாப் 10 நடிகைகளின் பட்டியலில் ஒருவராக முன்னேறிவிட்டார். மேலும் முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருக்கிறது. இவர் படத்தில் நடிப்பது மட்டுமின்றி, சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்களின் மனதை பதம் பார்க்கிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா ஷோவை குறித்து ஒரு பதிவை குறிப்பிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் பேசிய சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, புருஷனின் இயலாமையை குறைகூறும் மனைவிக்கு, அவர் அறியாமை ஒன்றும் தவறில்லை என்று ஆதரவாக பேசியுள்ளார். இதனை பேசிய கோபிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு பதிவில், ஒருவரின் மனதை புண்படுத்தி மகிழ்வது ஒரு வித மனநோய், உங்கள் பேச்சுக்கள் நன்றாக இருந்தது கோபி அண்ணா, இங்கு ஒரு வார்த்தை சொன்ன அதுல ஆயிரம் அர்த்தம் கண்டு பிடிக்கிறாங்க. ஆனால் என்றும் தந்தையை யாராலும் ஜெயிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொகுப்பாளினி டிடி பதிவில், இந்த மாதிரி நம்பிக்கையாக பேசும் குழந்தை, ஒரு நல்ல தாய் தந்தை வளர்ப்பிற்கு எடுத்து காட்டு என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here