செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ..!!

0

ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது 12 நாட்கள் ஆகிவிட்டது. மேலும் செப்டம்பர் 2022 மாதத்தில் வங்கிகளில் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கப்போகும் நாட்களின் விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்னதாக வெளியிட்டது. இதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மேலும் 8 நாட்கள் ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின் கீழ் வருகின்றன. மீதமுள்ள நாட்கள் வார இறுதி நாட்கள் ஆகும். இருப்பினும் வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கிச் செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, சில வங்கி விடுமுறைகள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படும்.

மேலும் வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் மாறுபடும் என்பதையும் அனைத்து விடுமுறைகளும் அனைத்து வங்கி நிறுவனங்களால் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த மாதத்தில் 9 வங்கி விடுமுறைகள் ஏற்கனவே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RBI பட்டியலின்படி செப்டம்பர் 2022ல் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ:

  • செப்டம்பர் 21 (புதன்கிழமை): ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் – கொச்சி, திருவனந்தபுரம்
  • செப்டம்பர் 18: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
  • செப்டம்பர் 24: நான்காவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 25: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here