அரசியல்வாதியை மணமுடிக்கும் தனுஷ் பட நடிகை – வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!!

0

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘பட்டாஸ்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவுக்கு அரசியல்வாதி ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடிகை மெஹ்ரீன் பிர்சாதா

பஞ்சாபி பெண்ணான நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். 2016ம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர் சந்தீப் கிஷனுடன், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மெஹ்ரீன் பிர்சாதா. பின்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியான ‘நோட்டா’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் இவர்.

உடல் எடை குறைந்த நடிகை நயன்தாரா – போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மெஹ்ரீன். தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதி பவ்யா பிஷ்னோய் என்பவரை திருமணம் செய்யும் நடிகை மெஹ்ரீனின் நிச்சயதார்த்தம் நேற்று ஜெய்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here