ஜோதிகாவின் அக்கா நக்மாவை தெரியும்.. அவரின் தங்கையை பார்த்துள்ளீர்களா – புகைப்படம் உள்ளே!

0
ஜோதிகாவின் அக்கா நக்மாவை தெரியும்.. அவரின் தங்கையை பார்த்துள்ளீர்களா - புகைப்படம் உள்ளே!

நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மாவை நம் அனைவர்க்கும் தெரியும். ஆனால் அவரின் தங்கையை நம்மில் பலரும் பார்த்திருக்க மாட்டோம். இந்நிலையில் ஜோதிகாவின் தங்கை ரோஷினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா:

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜோதிகா. 2000 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் இவர் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகியாக திகழ்ந்து வந்தவர் இவர். ஜோதிகா நடித்த குஷி, தூள், பூவெல்லாம் உன் வாசம், சந்திரமுகி, காக்க காக்க ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவர் கடந்த 2006ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடிகை ஜோதிகாவின் அக்கா தான் நக்மா. இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஆனால் தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை ஜோதிகாவின் தங்கை ரோஷினி பற்றி அதிகமாக ரசிகர்களுக்கு தெரியாது. இந்நிலையில் ரோஷினி குடும்பத்துடன் இருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளி கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் ஜோதிகா, நக்மாவுடன் உடன் ரோஷினியும் இடம் பெற்றுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here