நடிகை ஸ்நேகா வீட்டில் நடந்த முக்கிய குடும்ப விழா – நேரில் வந்து கலந்து கொண்ட நடிகர் தனுஷ்!!

0
நடிகை ஸ்நேகா வீட்டில் நடந்த முக்கிய குடும்ப விழா - நேரில் வந்து கலந்து கொண்ட நடிகர் தனுஷ்!!

நடிகை சினேகாவின் தந்தைக்காக சமீபத்தில் நடந்த முக்கிய பூஜை ஒன்றில், அவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட போட்டோக்கள், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என அழைக்கப்படும் இவர், நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் நாயுடுவுக்கு பீமரத சாந்தி எனும் 70 வயது நிரம்பியவருக்கான பூஜை நடந்துள்ளது. அந்த பூஜையில் நடிகை சினேகா, தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடிகை சினேகா தனது அண்ணன் கோவிந்த் நாயுடு மற்றும் அண்ணி சௌமியா உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இவரது அண்ணி சௌமியா ஒரு புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த விழாவில் நேரில் வந்து கலந்து கொண்ட நடிகர் தனுஷ், சினேகாவின் குடும்பத்துடன் இணைந்து போட்டோ எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here