சீதாராமன் சீரியலில் விலகிய பிரியங்கா., இனி அவருக்கு பதில் இவர் தான்.., வெளிவந்த தகவல்!!

0
சீதாராமன் சீரியலில் விலகிய பிரியங்கா., இனி அவருக்கு பதில் இவர் தான்.., வெளிவந்த தகவல்!!
சீதாராமன் சீரியலில் விலகிய பிரியங்கா., இனி அவருக்கு பதில் இவர் தான்.., வெளிவந்த தகவல்!!

ஜீ தமிழ் திரையில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது சீதாராமன் சீரியல். இந்த தொடர் இரவு 7.30 மணியளவில் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது. இதில் ஹீரோவாக நடிகர் ஜெய் டி சோசாவும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். இதில் வில்லி கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா நடிக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் அந்தஸ்திலும் அழகிலும் சிறந்த தன் மகனுக்கு பேரழகியை மனைவியாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் ரேஷ்மா இருக்கிறார். ஆனால் எளிமையான தோற்றம், படிக்காத ஒரு பெண் தன் வீட்டுக்கு மருமகளாக வரும் நிலையில் அவரை வெறுக்கிறார். தனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் தன் கணவர் வீட்டு குடும்பத்தினரை சீதா தனியாளாக நின்று எதிர்ப்பதை மையமாக வைத்து இந்த சீரியல் கதை களம் நகர்கிறது.

மொபைல் தொலைந்து விட்டதா?? இனி ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.., மத்திய அரசு மாஸ்டர் பிளான்!!!

இந்த நிலையில் நேற்று ‘சீதாராமன்’ சீரியலில் இருந்து ஹீரோயின் பிரியங்கா விலகுவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து ஹீரோயின் சீதா கேரக்டரில் இனி அவருக்கு பதிலாக நடிகை ஆஷா கௌடா நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. இவர் இதற்கு முன் ஜீ தமிழின் ”கோகுலத்தில் சீதை” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here