மொபைல் தொலைந்து விட்டதா?? இனி ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.., மத்திய அரசு மாஸ்டர் பிளான்!!!

0
மொபைல் தொலைந்து விட்டதா?? இனி ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.., மத்திய அரசு மாஸ்டர் பிளான்!!!
மொபைல் தொலைந்து விட்டதா?? இனி ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.., மத்திய அரசு மாஸ்டர் பிளான்!!!

இன்றைய காலகட்டத்தில் பல முக்கியமான தகவல்கள் மொபைல் போன்களின் மெமரியில் சேமிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மொபைல் போன்களை தொலைத்தவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதோடு அதில் உள்ள டேட்டாக்களை யாரேனும் தவறாக பயன்படுத்துவார்களோ? என அச்சத்திலும் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் மத்திய அரசு CEIR என்ற https://www.ceir.gov.in/Home/index.jsp இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தளத்தில் காவல்துறையில் புகார் அளித்த FIR நகலை அப்லோட் செய்து செல்போன் மாடல், செல்போன் எண், IMEI நம்பர், திருடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தகவல்கள் சோதனை செய்து தங்களது மொபைல் பிளாக் செய்யப்படும். அதோடு அவற்றை மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அப்படி மொபைல் போன் கிடைக்கும் பட்சத்தில் அதே இணையதளத்தில் சென்று அன்பிளாக் செய்து மொபைலை பயன்படுத்தலாம்.

பிச்சைக்காரன் 2 ஷூட்டிங்கில் உயிருக்கு போராடிய விஜய் ஆண்டனி.., கடவுள் போல் உதவிய நடிகை.., புகழாரம் பாடிய பாக்யராஜ்!!

இந்த வசதி கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வந்தது. நாளை முதல் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்பட உள்ளதாக மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here