உலகெங்கும் சுமார் 200 கோடிக்கும் மேல் பயனாளர்களை கொண்ட தளமாக வாட்ஸப் செயலி உள்ளது. வாடிக்கையாளர்களை வியக்கும் வகையில் சாட்டிங், ஆடியோ மற்றும் வீடியோ கால் என பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து வாட்ஸப் மூலம் பணம் அனுப்பும் வசதியையும் அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் பயனாளர்களுக்கு தனிமனித சுதந்திரம் அளிக்கும் வகையில் “Chat Lock” என்ற வசதியை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இதன் மூலம் மிக முக்கியமான சாட் அக்கவுண்ட் லாக் செய்யலாம். இதற்கு அந்த முக்கியமானவரின் Profile கிளிக் செய்து Chat Lock என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது கைரேகை அல்லது பின் நம்பர் போட்டு ஆக்டிவேட் செய்யலாம்.
சீதாராமன் சீரியலில் விலகிய பிரியங்கா., இனி அவருக்கு பதில் இவர் தான்.., வெளிவந்த தகவல்!!
அதன் பின் உங்களது அனுமதி இல்லாமல் அந்த சாட்டை ஓபன் செய்ய முடியாது. இதில் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் லாக் செய்யப்படுவதால் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் மொபைல் கேலரியில் சேமிக்க முடியாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.