ஆடிஷனில் இதை செய்ய சொன்னார் வெற்றி மாறன்.., சீக்ரெட் உடைத்த முக்கிய நடிகை!!

0
ஆடிஷனில் இதை செய்ய சொன்னார் வெற்றி மாறன்.., சீக்ரெட் உடைத்த முக்கிய நடிகை!!
ஆடிஷனில் இதை செய்ய சொன்னார் வெற்றி மாறன்.., சீக்ரெட் உடைத்த முக்கிய நடிகை!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல தேசிய விருதுகளை வென்று ரசிகர்களின் பேவரைட் இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் எடுத்த எல்லா திரைப்படங்களும், வெற்றி வாகை சூடியது தான். சமீபத்தில் வெளியான விடுதலை படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இருந்தாலும் இவரின் சினிமா கேரியரில் ரசிகர்கள் பெஸ்ட் என்று சொல்லும் திரைப்படம் என்றால் அது வட சென்னை தான்.

இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளையும் வெற்றிமாறன் செதுக்கி இருப்பார். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை எப்படி வெற்றிமாறன் செலக்ட் செய்தார் என்பது குறித்து பேசியிருந்தார். அதாவது, இந்த படத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷும் ஆடிசன் சென்றுள்ளார்.

இறந்துபோன விவேக் தனது மகனுடன் இருந்த நிமிடங்கள்.., கண்கலங்க வைத்த புகைப்படம்!!

அப்போது வெற்றிமாறன் உங்களுக்கு கெட்ட வார்த்தை பேச தெரியுமா என்று கேட்டுள்ளார். தெரிந்தால் பேசுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு தெரிந்த எல்லா கெட்ட வார்த்தையும் பேசியுள்ளார். அவர் பேசியதில் வாயடைத்து போன வெற்றிமாறன், என்ன பத்மா எப்ப ஷூட்டிங் போலாம் என்று வட சென்னை பாஷையில் பேசி செலக்ட் செய்தார் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here