அடடா., ”தளபதி 68” வெங்கட் பிரபு படத்தில் அந்த பிரபல மீண்டும் இணைகிறாரா? அவரே கொடுத்த அப்டேட்!!

0
அடடா., ''தளபதி 68'' வெங்கட் பிரபு படத்தில் அந்த பிரபல மீண்டும் இணைகிறாரா? அவரே கொடுத்த அப்டேட்!!
அடடா., ''தளபதி 68'' வெங்கட் பிரபு படத்தில் அந்த பிரபல மீண்டும் இணைகிறாரா? அவரே கொடுத்த அப்டேட்!!

தென்னிந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர் , பாடகர் என பல அவதாரங்களை எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் வெங்கட் பிரபு. தற்போது இவர் நடிகர் விஜயின் 68 வது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது.மேலும் இப்படத்தை ags நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் எஸ். ஜெ. சூர்யாவை நடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுபோக இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களை தேடும் பணியில் வெங்கட் பிரபு இறங்கியுள்ளார் என செய்தி வெளியாகியிருந்தது. பொதுவாக இவரது இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களில் பிரேம்ஜி, ஜெய் உள்ளிட்ட பிரபலங்களின் காம்போ நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஜெயிடம் இது குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் கூறியதாவது, வெங்கட் அண்ணா இயக்கத்திலும் சரி, விஜய் அண்ணாவின் படத்திலும் சரி, இவர்களுடன் நான் நடித்து வெகு நாட்களாகி விட்டது.

இறந்துபோன விவேக் தனது மகனுடன் இருந்த நிமிடங்கள்.., கண்கலங்க வைத்த புகைப்படம்!!

மேலும் தளபதி 68 ல் நான் இருக்கிறேனா என்று எனக்கே தெரியாது. மேலும் இதை பற்றி வெங்கட் அண்ணா சில விஷயங்களை ரகசியமாக தான் வைத்திருக்கிறார். ஒருவேளை இப்படத்தில் நான் நடிப்பதாக இருந்தாலும் இப்போது என்னால் சொல்ல முடியாது. அப்படி நடிப்பதாக இருந்தால் அது குறித்து announcement வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இப்படம் தனித்துவமான கதைக்களத்துடன் மாஸ்ஸான படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here