பாக்குறதுக்கு மாறுவேட போட்டி மாதிரி இருக்கே.., விஷாலின் “மார்க் ஆண்டனி” போஸ்டரை பார்த்து பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்!!

0
பாக்குறதுக்கு மாறுவேட போட்டி மாதிரி இருக்கே.., விஷாலின்
பாக்குறதுக்கு மாறுவேட போட்டி மாதிரி இருக்கே.., விஷாலின் "மார்க் ஆண்டனி" போஸ்டரை பார்த்து பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்!!

நடிகர் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால்:

தமிழ் சினிமாவில் திமிரு, செல்லமே, தாமிரபரணி, சண்டக்கோழி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் விஷால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து லோகேஷ் படைப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 67 ல் விஷால் நடிக்கிறார் என்று சோசியல் மீடியாவில் பரவலாக செய்திகள் பரவின.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கு விஷால் முற்றிலும் மறுத்து விட்டார். இருப்பினும் அவர் சஸ்பென்சாக நடிப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் விஷால். அது போக அவருக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க ஹீரோயினாக ரீத்து வர்மா நடித்து வருகிறார். மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

நான் அந்த மாதிரி திரிஞ்சேன்.., மனுஷனா மாத்துனது என் மனைவி தான்.., நடிகர் ரஜினி உருக்கம்!!

இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அந்த போஸ்டரில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா கெட்டப் அப்படியே வெளியே தெரிகிறது. அதாவது விக்கு மற்றும் ஒட்டு தாடி என குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் கலந்து கொள்ளு மாறுவேட போட்டிக்கு செல்வது போல் கெட்டப் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here