போகப்போக எகிரும் துணிவு படத்தின் Collection .., வசூலில் சொல்லி அடிக்கும் அஜித்!!

0
போகப்போக எகிரும் துணிவு படத்தின் Collection .., வசூலில் சொல்லி அடிக்கும் அஜித்!!
போகப்போக எகிரும் துணிவு படத்தின் Collection .., வசூலில் சொல்லி அடிக்கும் அஜித்!!

நடிகர் அஜித் குமார் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துணிவு திரைப்படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் லீக்காகி உள்ளது.

துணிவு திரைப்படம்:

கோலிவுட் வட்டாரங்களில் அமராவதியில் தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனமும் , வெளிநாட்டில் லைக்கா நிறுவனமும் ரிலீஸ் செய்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று இருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உலக அளவில் துணிவு திரைப்படம் 120 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

பாக்குறதுக்கு மாறுவேட போட்டி மாதிரி இருக்கே.., விஷாலின் “மார்க் ஆண்டனி” போஸ்டரை பார்த்து பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்!!

அதாவது தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத்துடன் சேர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கல்லா கட்டி வருகிறது. மேலும் இதுவரை அஜித் திரைப்படங்கள் இந்த அளவுக்கு வசூல் செய்தது இல்லை என்றும், இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் மட்டுமின்றி அஜித்தும் படு குஷியில் இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here