மீண்டும் காதல் ஜோடியாக மாறிய விஷால் – லட்சுமி மேனன்? இணையத்தில் பரவும் தகவல்!!

0
மீண்டும் காதல் ஜோடியாக மாறிய விஷால் - லட்சுமி மேனன்? இணையத்தில் பரவும் தகவல்!!
மீண்டும் காதல் ஜோடியாக மாறிய விஷால் - லட்சுமி மேனன்? இணையத்தில் பரவும் தகவல்!!

நடிகர் விஷால் மற்றும் லட்சுமி மேனன் மீண்டும் ஒன்று சேர இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

விஷால் – லட்சுமி மேனன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தான் நடிகர் விஷால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படங்களில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த இரண்டு படங்களின் நடித்ததன் மூலமாக இருவருக்கும் காதல் இருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. ஒரு பேட்டி ஒன்றில் கூட லட்சுமி மேனன் தனக்கு ராசியான நடிகை, அவருடன் நடித்த படங்கள் எனக்கு வெற்றியை ஈட்டித் தந்தது என்று பேசியுள்ளார். அதை வைத்து அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக நெட்டிசன்கள் கூறினார். ஆனால் இதுகுறித்து இருவரும் பேசவில்லை.

இதைத்தொடர்ந்து இவருக்கும் அனிஷா என்கிற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று கல்யாணம் வரை சென்று பாதியில் நின்றது. அதற்கு காரணம் லட்சுமி மேனனுடன் விஷால் இருந்த தொடர்பு தான் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஷாலும் லட்சுமி மேனனும் மீண்டும் படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் பொறுத்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here