“தங்கலான்” படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு விபத்து – அடக்கடவுளே.., இப்படி ஆயிப்போச்சே!!

0
"தங்கலான்" படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு விபத்து - அடக்கடவுளே.., இப்படி ஆயிப்போச்சே!!

நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உலகநாயகனுக்கு அடுத்து ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னை கஷ்டப்படுத்தி நடிப்பவர் தான் நடிகர் விக்ரம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து வந்தார். பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் நடிகர் விக்ரமும் கலந்து கொண்டார்.

அஜித்துடன் ஜோடி சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி.., அப்பவே இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கா?

அப்போது நடந்த படப்பிடிப்புக்காக நடந்த ஒத்திகையின்போது விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவரது விலா எலும்பு முறிந்தது. இதனை தொடர்ந்து பதறிப்போன படக்குழுவினர், உடனே அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். எனவே அவரால் சில நாட்கள் படப்பிடிப்பில் இணைய முடியாதாம்.விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் இணைவார் என அவரது மேனேஜர் டுவிட்டரில் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here