வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

0
வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!
வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

நடிகர் விஜய் வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் முக்கிய தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

வாரிசு படம்:

தமிழ் திரையுலகில் பல இன்னல்களை சந்தித்து தற்போது அடுத்த சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் நிறைந்திருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பேசியது, சில சர்ச்சைகளை கிளம்பினாலும், ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாட பட்டு தான் வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் புரோமோஷன் வேளைகளில் பிசியாக இருந்து வருகிறார்கள். இந்த திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், ஆன்லைன் புக்கிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மஞ்சிமாவை கழட்டிவிட்டு கெளதம் கார்த்திக் செய்த காரியம்.., அவரே வெளியிட்ட பதிவு!!

குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை என்றும் அதற்கான பணிகள் இன்று நடைபெற உள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் படத்தை ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் தெலுங்கு பாலா நடிக்கும் வீர சிம்ஹா ரெட்டிக்கு பயந்து தான் தில் ராஜு ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக தெலுங்கு வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here