இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.., 5வது நாளில் எகிரும் வாரிசு வசூல்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.., 5வது நாளில் எகிரும் வாரிசு வசூல்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.., 5வது நாளில் எகிரும் வாரிசு வசூல்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் வசூல் விவரம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் கிங்காக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவான நிலையில், கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி சக்க போடு போட்டு வருகிறது. இப்படம் சென்டிமென்ட் கலந்த கமர்சியல் படம் என்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் படத்தில் 90ஸ் தளபதியை காண முடிகிறது என்று மக்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இப்படம் வெளியான முதல் நாள் வசூலில் துணிவை விட கம்மியான வசூலை பெற்று வந்த நிலையில், தற்போது வாரிசின் வசூல் எகிற தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஜனவரி 14ம் தேதி தெலுங்கு வெர்ஷன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கோலி சோடா பட நடிகைக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கா? நீங்கள் பார்த்திராத பேமிலி போட்டோ!!

இந்நிலையில் வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்து இணையத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தின் வசூல் உலக அளவில் 150 கோடியை அள்ளியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இனி வரும் நாட்களில் 200 கோடிகளை அள்ளும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here