கேள்வி குறியாகி வரும் ரோஹித் சர்மா பார்ம்…, அறிவுரை வழங்கிய இந்திய தொடக்க வீரர்!!

0
கேள்வி குறியாகி வரும் ரோஹித் சர்மா பார்ம்..., அறிவுரை வழங்கிய இந்திய தொடக்க வீரர்!!
கேள்வி குறியாகி வரும் ரோஹித் சர்மா பார்ம்..., அறிவுரை வழங்கிய இந்திய தொடக்க வீரர்!!

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ரோஹித் சர்மாவின் பார்ம் கேள்வி குறியாகி வருவதாக கூறி கம்பீர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

கம்பீர்:

இந்திய அணியானது, இந்த வருடத் தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாடியது. இதில், டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 3-0 எனவும் இந்திய அணி அபாரமாக கைப்பற்றியது. இந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி அபாரமாக விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா அணியை சிறப்பாக வழி நடத்தினாலும், தனது பேட்டிங்கில் சொதப்பி வருகிறார் என கூறியுள்ளார்.

ஜடேஜாவை தொடர்ந்து பும்ராவுக்கும் செக் வைத்த பிசிசிஐ?? வெளியான தகவல்!!

மேலும், கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா சதம் அடித்ததை தவிர்த்து பார்த்தால், இவர் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்று கம்பீர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ரோஹித் கடைசியாக விளையாடிய 50 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க வில்லை. இதனால், இவர் கூடுதலாக உழைத்து பார்மை மீட்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here