இந்தியாவில் கொரோனா எதிரொலி.., இனி முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் கட்டாயம்.., மாநில அரசு அறிவிப்பு!!!

0
இந்தியாவில் கொரோனா எதிரொலி.., இனி முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் கட்டாயம்.., மாநில அரசு அறிவிப்பு!!!
இந்தியாவில் கொரோனா எதிரொலி.., இனி முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் கட்டாயம்.., மாநில அரசு அறிவிப்பு!!!

ஓராண்டாக கொரோனா அச்சுறுத்தல் நீங்கி மக்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று வீரியம் பெற்று 20 நாட்களில் 248 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் குஜராத், ஆந்திரா, மேற்கு வங்கம் என இந்தியாவிலும் ஆங்காங்கே புதிய வகை கொரோனா பதிவாகி வருகிறது. இதனால் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை மற்றும் நெகட்டிவ் சான்றிதழ் போன்றவற்றை மத்திய மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி சில மாநிலங்களிலும் முக கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்த படுத்தப்படுகிறது.

கேள்வி குறியாகி வரும் ரோஹித் சர்மா பார்ம்…, அறிவுரை வழங்கிய இந்திய தொடக்க வீரர்!!

இதைத்தொடர்ந்து தற்போது கோவிட் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் தொடர்வதால் கேரளாவில் வாகனம், அரசு பேருந்து என அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் இடைவெளியையும் பின்பற்ற கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜனவரி 12ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here