
தமிழகத்தில், பொது தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த பணிகள் ஆரம்பமாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணைப்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு தொடங்க உள்ளதால் இதற்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் இறுதி பட்டியல் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா எதிரொலி.., இனி முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் கட்டாயம்.., மாநில அரசு அறிவிப்பு!!!
இதுகுறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், பொது தேர்வுக்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அடுத்த வாரம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதற்கான ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் தேர்வுக்கு, தீவிரமாக தயாராகி வருகின்றனர்.