பயோபிக் கதையை கையில் எடுத்த விஜய் சேதுபதி.., அதுவும் இந்த பிரபலத்தோட “History”.., வெளியான அப்டேட்!!

0
பயோபிக் கதையை கையில் எடுத்த விஜய் சேதுபதி.., அதுவும் இந்த பிரபலத்தோட
பயோபிக் கதையை கையில் எடுத்த விஜய் சேதுபதி.., அதுவும் இந்த பிரபலத்தோட "History".., வெளியான அப்டேட்!!

நடிகர் விஜய் சேதுபதி முன்னாள் முதல்வர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாத்துறையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. தற்போது இவர் DSP, ஜவான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் DSP திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முன்னாள் முதல்வர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லைங்க., கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தான். இவர் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து, சட்ட படிப்பை முடித்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். முதலில் எம்எல்ஏ பதவியில் வெற்றி பெற்று, அதன் பின்னர் கடந்த 2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக இருந்தார். இவர் கடந்து வந்த பாதைகளை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளனர்.

மூர்த்தி குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும் பார்வதி.., கடைசி நேரத்தில் தனம் செஞ்ச காரியம்.., லேட்டஸ்ட் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

மேலும் பான் இந்திய படமாக உருவாக இருப்பதால் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதிப்பாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்னர் கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்க விஜய் சேதுபதி கமிட்டாகி இருந்த போது, அவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here