மூர்த்தி குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும் பார்வதி.., கடைசி நேரத்தில் தனம் செஞ்ச காரியம்.., லேட்டஸ்ட் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

0
மூர்த்தி குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும் பார்வதி.., கடைசி நேரத்தில் தனம் செஞ்ச காரியம்.., லேட்டஸ்ட் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!
மூர்த்தி குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும் பார்வதி.., கடைசி நேரத்தில் தனம் செஞ்ச காரியம்.., லேட்டஸ்ட் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தில் உள்ள அனைவரும் புது வீடு கட்டுவதற்கான வேலையை மும்முரமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், கண்ணன் சேர்ந்து கட்டிலை தூக்கி கொண்டு வந்து வைக்க உடனே மீனா அவர்கள் தான் படுத்துக் கொள்வார்கள் என ஜீவாவிடம் சொல்கிறார். ஆனால் கதிர் மீனாவிடம் இந்த கட்டிலில் நீங்களே தூங்குங்க என கூறுகிறார். மறுநாள் குடும்பத்தில் உள்ள அனைவரும் புது இடத்தில் பூஜை போட கிளம்பி கொண்டிருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது மூர்த்தி, கதிர் இருவரும் கடைக்கு கிளம்ப ஜீவா, கொஞ்சம் நேரம் கழித்து வருவதாக சொல்கிறார். பின் ஜீவா, தனம் இருவரும் முல்லையின் நகையை திருப்புவதற்காக கடைக்கு செல்கின்றனர். அங்கு கடைக்காரர் சீட்டு இருக்கிறதா என கேட்க தனம் இல்லை என்று சொல்கிறார். பிறகு கடைக்காரர் அப்புறம் எப்படி நகையை கொடுக்க முடியும் என கேட்கிறார். உடனே ஜீவா கடைக்காரரிடம் எங்கள பத்தி உங்களுக்கு தெரியாதா என சொல்லி நகையை கேட்க கடைக்காரரும் கொடுக்கிறார்.

டிஎன்ஏ ரிப்போர்ட் மாத்துனது, Ex ஹேமாவை கொன்றது வெண்பா தான்.., உண்மையை உடைத்த துர்கா! பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

பின் வீட்டில் உள்ள அனைவரும் பூமி பூஜைக்கு கிளம்பி ரெடியாக இருக்கின்றனர். அப்போது மீனா மற்றவர்கள் நகை அணிந்து கொள்கின்றனர். ஆனால் முல்லை மட்டும் வெறும் தாலி கயிருடன் இருக்கிறார். இதை பார்த்து அவரது அம்மா பார்வதி, முருகனிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அதற்கு முருகன் சும்மா இரு எதும் பிரச்சனை செஞ்சுடாத என சொல்கிறார். பின் கதிர், மூர்த்தி இருவரும் வீட்டிற்கு வந்து தனம் எங்கே என கேட்கின்றனர். அப்போது தனம் வர மூர்த்தி எங்கே சென்றாய் என கேட்க, முல்லையின் நகையை கொடுத்து இதை வாங்க சென்றதாக தனம் சொல்கிறார். இதை கேட்ட முருகன், பார்வதியிடம் குடும்பம் எவ்வளவு ஒற்றுமையா இருக்காங்கனு பாத்துக்கோ என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here