தளபதி விஜய் வீட்டில் நடந்த மாபெரும் விசேஷம் – வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்!!

0

தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகராக இருக்கும் விஜய் தற்போது தனது 22 வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்.

தளபதி விஜய்

மாண்புமிகு மாணவன் படத்தில் ஆரம்பித்து தற்போது வரை பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தான் தளபதி விஜய். தொடர்ந்து இவரின் படங்கள் அனைத்தும் கோடிக்கணக்கில் வசூலை பெற்று சாதனை படைத்து வருகிறது.

மேலும் இவரின் தீவிர ரசிகையை தான் இவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். பூவே உனக்காக படத்தை பார்த்து விட்டு அவரை பாராட்ட சங்கீதா குடும்பத்துடன் நேரிலேயே வந்து விட்டாராம்.

அதன் பிறகு இரு குடும்பமும் நட்பாக சங்கீதா, விஜய் திருமணம் நடந்துள்ளது. தற்போது ஒரு ஒற்றுமையான தம்பதிகளுக்கு எடுத்து காட்டாக இருப்பது விஜய், சங்கீதா தான். 1999 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது 22வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் பல பிரபலங்கள் தளபதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தளபதி அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன் மனைவி தன்னை மிகவும் புரிந்து வைத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இவர்களின் இந்த அன்னியோன்யம் தான் அனைவரையுமே வியக்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here