“ரத்தம்” பட டீசரில் இறங்கிய தேசிய விருது இயக்குனர்.., வெளியான புதிய அப்டேட்!!

0
"ரத்தம்" பட டீசரில் இறங்கிய தேசிய விருது இயக்குனர்.., வெளியான புதிய அப்டேட்!!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ரத்தம் திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் தான் விஜய் ஆண்டனி. அவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, படத்தோட டைட்டிலையும் வித்தியாசமாக வைத்து வருகிறார். மேலும் விஜய் ஆண்டனி இசையமைப்பதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதன் படைப்பில் ரத்தம் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அது போக மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இக்கதை முழுக்க முழுக்க திரில்லராக இருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கண்ணன் என்பவர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இரண்டு நபர்கள் செய்த காரியம்.., காட்டுத்தீயாய் பரவும் செய்தி!!

அதாவது விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் படத்தின் டீசர் டிசம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த டீசரில் வெற்றிமாறன், பா. ரஞ்சித் மற்றும் வெங்கட்ப்ரபு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here