
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் எஸ்.வி.சேகர். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அரசியலில் குதித்த இவர் மயிலாப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் காவல்துறையிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது கடந்த 22ம் தேதி மதிய வேளையில் எனது போனுக்கு மர்ம நபர் ஒருவர் கால் செய்து, என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் அவர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதாக கூறி என்னை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு கட்டத்தில் ஆபாச வார்த்தைகள் அதிகரிக்க தொடங்கியதால் போனை கட் செய்தேன்.
மாணவர்களே ரெடியாகிக்கோங்க.., இன்னும் 2 நாளில் பள்ளிகள் திறப்பு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மூன்று கால்கள் தொடர்ந்து வந்தது. அதேபோல் ஆபாச வார்த்தைகளுடன் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். ஏற்கனவே 2 முறை என்னுடைய வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. இந்த நிலையில் எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டனர். எனவே என்னுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் காவல்துறையே பொறுப்பு என்று புகார் அளித்துள்ளார்.