மாணவர்களே ரெடியாகிக்கோங்க.., இன்னும் 2 நாளில் பள்ளிகள் திறப்பு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
மாணவர்களே ரெடியாகிக்கோங்க.., இன்னும் 2 நாளில் பள்ளிகள் திறப்பு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
மாணவர்களே ரெடியாகிக்கோங்க.., இன்னும் 2 நாளில் பள்ளிகள் திறப்பு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வர உள்ள நிலையில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் நிலவும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பை ஜூன் 2வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு இடைப்பட்ட காலத்தில், பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்தந்த மாநில கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன்படி, கடந்த மே 11ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. நாளை மறுநாள்(மே 29) புதிய கல்வி ஆண்டுக்கான உயர்நிலை பள்ளி வகுப்புகள் தொடங்கும் என்பதால், அம்மாநில கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சில முன்னறிவிப்புகளை வழங்கியுள்ளது.

ஏய்., கோபி., உனக்கு நா முக்கியமா? அவ முக்கியமா? அந்தரத்தில் தொங்கும் ராதிகா வாழ்க்கை.., ஈஸ்வரி எடுத்த தடாலடி முடிவு!!!

அதாவது பள்ளிகளில் குடிநீர், கழிவறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கான பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் சரியாக நடைபெற்று முடிந்துள்ளதா என்றும் மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால், பள்ளிகளின் கட்டிட அமைப்பு, மேற்கூரை அமைப்பு உள்ளிட்டவைகளையும் கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த வாரம் மழை பெய்து பள்ளிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அந்த பராமரிப்பு பணி முடியும் வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here