மீண்டும் ஹீரோவாகும் சூரி., பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்? அதுவும் இவங்க படத்துலையா?

0
மீண்டும் ஹீரோவாகும் சூரி., பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்? அதுவும் இவங்க படத்துலையா?
மீண்டும் ஹீரோவாகும் சூரி., பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்? அதுவும் இவங்க படத்துலையா?

நடிகர் சூரி வெற்றிமாறன் படைப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், தற்போது அடுத்த படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி:

தமிழ் சினிமாவில் காமெடியில் பின்னி பெடலெடுத்து வருபவர் தான் நடிகர் சூரி. தற்போது காமெடியனில் இருந்து ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அதன்படி தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் படைப்பில் விடுதலை என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தில் சூரிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படம் கூடிய விரைவில் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் சூரி ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் பார்ட் 2.., படத்தின் சூட்சுமங்களை உடைத்த ஜெயம் ரவி.., ஓ அப்போ இதுக்கு தான் வெயிட்டிங்கா?

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்க இருக்கும் படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான அன்னா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here