ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடிக்கு சொத்துகள் அடமானம் – நடிகர் சோனு சூட்டின் சமூக நலன்!!

0

ஹிந்தி நடிகர் சோனு சூட் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துக்களை அடகு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது சமூக நலனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஹிந்தி நடிகர் சோனு சூட்:

ஹிந்தி திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர், சோனு சூட். இவர் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வில்லன் வேடங்களிலும் சில குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நடுத்தர மக்கள் அதிகமான பாதிப்புகளை சந்தித்தனர். அதிலும், குறிப்பாக பிற மாநிலங்களில் வேலைக்காக சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு பலரும் உதவிய நிலையில், நடிகர் சோனு சூட் பல விதமான உதவிகளை செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரையில் வில்லனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஹீரோவாக தான் இருந்து வருகிறார். அவர் பலருக்கும் தொடர்ந்து உதவி புரிந்து வந்தார். ஏழை பெண்களின் படிப்புகளுக்காக உதவி செய்தார், பலருக்கும் அறுவை சிகிச்சை செய்ய உதவினார், அதே போல் ஒருவருக்கு டிராக்டர் கூட வாங்கி கொடுத்தார். இதனால் அவரை வெகுவாக அனைவரும் பாராட்டி வந்தனர்.

உனக்கு கல்யாணம் பண்ண வேற ஆம்பளயே கிடைக்கலயா?? வெண்பாவின் முகத்திரையை கிழிக்கும் அகிலன்!!

தற்போது மேலும் பல ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது பெயரில் இருந்த 6 குடியிருப்புகள் மற்றும் தனது மனைவி சோனாலி பெயரில் இருந்த 2 கடைகளை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். அவரது சமூக நலன் குறித்த அக்கறையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த அடமான கடனுக்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கையெழுத்தாகி, நவம்பர் 24 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here