5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – இந்தியர் தலைமையிலான குழு சாதனை!!

0

கொரோனா தொற்று பரிசோதனை மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றை 5 நிமிடத்தில் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு கண்டுபிடித்து சோதனையில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கொரோனா 5 நிமிட பரிசோதனை:

சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா உலக நாடுகளில் உள்ள மக்கள் பலரையும் தன் வசப்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் மரணமடைந்துள்ளனர், பலர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றை பரிசோதிக்கும் வகையில் பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பல நாடுகள் முன்னேறி வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் அடுத்த கட்டமாக 5 நிமிடத்திலேயே கொரோனா தொற்றை கண்டறிந்து உறுதி செய்யும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பு காகித அடிப்படியிலானது. கிராஃனிக் கொண்டு மின்வேதியியல் சென்சார் மூலம் பரிசோதிக்கும் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இக்கருவி 5 நிமிடத்தில் கொரோனா தோற்று உள்ளதா? இல்லையா? என்பததை தெரிவித்துவிடும்.

ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடிக்கு சொத்துகள் அடமானம் – நடிகர் சோனு சூட்டின் சமூக நலன்!!

இக்கருவியை பயன்படுத்தி கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும் சோதித்தனர். கொரோனா தொற்று கொண்ட பரிசோதனை 5 நிமிடத்திலேயே தனது பதில்களை தெரிவித்தது. இது கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோடெக் நிறுவனமும் இணைந்து பைசர் எனும் தடுப்பு மருந்து உருவாக்கியது. இந்த பைசர் தடுப்பு மருந்துக்கு இங்கிலாந்து, பக்ரைன், கனடா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்தன. பைசர் நிறுவனத்திடம் இருந்து கனடா 7.6 கோடி டோஸ் தடுப்பு மருந்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், பைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here