தளபதி விஜய்யை குறித்து ஷாருக்கான் கூறிய அந்த வார்த்தைகள்.., ட்ரெண்டாகும் ட்விட்டர் பதிவு!!

0
தளபதி விஜய்யை குறித்து ஷாருக்கான் கூறிய அந்த வார்த்தைகள்.., ட்ரெண்டாகும் ட்விட்டர் பதிவு!!

நடிகர் விஜய்யை குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்

நடிகர் விஜய்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. மேலும் வாரிசு ட்ரைலர் எந்த அளவிற்கு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கும் நிலையில், அதற்கடுத்து நடிக்கும் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருக்கிறார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் என்று சில தகவல்கள் இணையத்தில் வெளியாகின. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் நடிகர் விஜய் குறித்து ஒரு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

குட்டை பாவாடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.., மனசை பறிகொடுத்து தவிக்கும் இணையவாசிகள்!!

அதாவது ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் புகைப்படத்தை பகிர்ந்து ஷாருக்கானிடம் விஜய்யை பற்றி சொல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நடிகர் சாருக் கான் அவர் மிகவும் இனிமையானவர், அமைதியானவர். ஒரு தடவை எனக்கு இரவு நேரத்தில் உணவு ஊட்டினார். அதை என்னால் மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here