“கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடாதீங்க சஞ்சு”…, தொடரும் இந்திய வீரர்களின் அறிவுரை!!

0
"கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடாதீங்க சஞ்சு"..., தொடரும் இந்திய வீரர்களின் அறிவுரை!!

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில், இந்திய அணியின் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் வெளியேறியதை அடுத்து, முன்னாள் வீரர்கள் பலர் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

சஞ்சு சாம்சன்:

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் திரிலான வெற்றி பெற்றது. நாளை 2வது டி20 போட்டி மகாராஷ்டிராவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியையும் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், கடந்த டி20 போட்டியில் இந்திய அணி செய்த தவறை, 2வது டி20 யில் சரி செய்யும் கூடும். இதில் குறிப்பாக, பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் சஞ்சு சாம்சன், கடந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் 5 ரன்களில் வெளியேறினார். இது குறித்து முன்னாள் வீரர், சுனில் கவாஸ்கர் சஞ்சு சாம்சனுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

இந்த ஒரு விஷயம் சச்சினை போலவே விராட் கோலிக்கும் இருக்கு…, இலங்கை வீரர் பளீச் பேட்டி!!

அதாவது, சஞ்சு சாம்சன் திறமையான பேட்ஸ்மேன். ஆனால், பந்துகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தான் சில நேரங்களில் ஏமாற்றி விடுகிறார் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதனை மட்டும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இவரை போன்று, கவுதம் கம்பீரும் கிடைக்கிற வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சஞ்சு சாம்சனுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here