அடக்கடவுளே.., சூர்யாவின் “வாடிவாசல்” ஷூட்டிங் மீண்டும் தள்ளிவைப்பு.., படக்குழுவினர் அறிவிப்பு!!

0
அடக்கடவுளே.., சூர்யாவின் "வாடிவாசல்" ஷூட்டிங் மீண்டும் தள்ளிவைப்பு.., படக்குழுவினர் அறிவிப்பு!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த வாடிவாசல் திரைப்படம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கி வரும் சூர்யா 42 படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் என்றால் அது வாடிவாசல் தான்.இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்ட வீடியோக்களை மட்டுமே இயக்குனர் வெற்றிமாறன் எடுத்துள்ளார்.

தளபதி விஜய்யை குறித்து ஷாருக்கான் கூறிய அந்த வார்த்தைகள்.., ட்ரெண்டாகும் ட்விட்டர் பதிவு!!

இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்க இருப்பதால் நடிகர் சூர்யா ஒரு காளை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். மேலும் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் படு சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here