வாரிசு பட நடிகருக்கு தூண்டில் போட்ட துணிவு இயக்குனர்.., கடைசியில் விஜய் பக்கம் ஒதுங்கிய சம்பவம்!!

0
வாரிசு பட நடிகருக்கு தூண்டில் போட்ட துணிவு இயக்குனர்.., கடைசியில் விஜய் பக்கம் ஒதுங்கிய சம்பவம்!!
வாரிசு பட நடிகருக்கு தூண்டில் போட்ட துணிவு இயக்குனர்.., கடைசியில் விஜய் பக்கம் ஒதுங்கிய சம்பவம்!!

நடிகர் அஜித் குமார் நடிக்கும் துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகர் குறித்து முக்கிய அப்டேட் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

துணிவு – வாரிசு:

தென்னிந்திய சினிமாவில் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் இவர்களுக்கு அடுத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிப்பவர்கள் தான் விஜய் – அஜித். தற்போது அவர்கள் நடித்த வாரிசு , துணிவு திரைப்படம் ஒரே நாளில் மோத இருக்கிறது. அதற்குள் இவர்களின் ரசிகர்கள் விவாதத்தில் இறங்கிவிட்டனர். மேலும் இந்த இரண்டு பெரிய மாஸ் ஹீரோக்களில், யார் படம் வெற்றி பெரும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக வாரிசு படத்தில் நடித்த ஒரு நடிகர் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் வினோத் ஒத்த காலில் நின்று உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அது வேற யாரும் இல்லைங்க நடிகர் ஷாம் தான். ஒரு காலத்தில் குஷி, இயற்கை, லேசா லேசா, அன்பே வா போன்ற ஹிட் படங்களை கொடுத்த சாம், சில ஆண்டுகளாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் தான் வாரிசு படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு கால் சீட் கொடுத்தார் ஷாம். இதனை தொடர்ந்து வினோத் ஷாமுக்கு கால் செய்து துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடியுள்ளார்.

பாலாவோட அந்த புத்தி தான் “வணங்கான்” படம் ட்ராப் ஆனதற்கு காரணம்.., பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்!!

அதன் பின்னர் நடிக்க ஒப்புக் கொண்ட ஷாமுக்கு, கால் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வினோத் கொடுத்த எல்லா தேதியிலும் ஷாம் வாரிசு படத்தில் கமிட்டாகியுள்ளார். அதனால் டேட்டை தள்ளி போட முடியுமா என்று ஷாம் கேட்ட நிலையில், இல்லை படத்திற்கு செட் போட்டாச்சு இப்போது தேதியை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார். இதனால் அவர் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று சமீபத்தில் நடந்த பேட்டியில் வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் விரைவில் அஜித்தோட சேர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here