வெளியிடங்களில் பொடுகு பிரச்சனையால் அசிங்கப்படுறீங்களா?? இதோ நிரந்தர தீர்வு உங்களுக்காக!!

0
வெளியிடங்களில் பொடுகு பிரச்சனையால் அசிங்கப்படுறீங்களா?? இதோ நிரந்தர தீர்வு உங்களுக்காக!!
வெளியிடங்களில் பொடுகு பிரச்சனையால் அசிங்கப்படுறீங்களா?? இதோ நிரந்தர தீர்வு உங்களுக்காக!!

இயற்கையான முறையில் நம்ம தலை முடிக்கு உறுதியையும், பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் பொடுகு தொல்லையில் இருந்து, நிரந்தரமான தீர்வையும் கொடுக்கும் ஒரு ஹேர் பேக் செய்வது எப்படின்னு தான் இன்னைக்கு நாம பார்க்க போறோம்.

தேவையான பொருட்கள்:

  • ஆவாரம் பூ – 100 கிராம்
  • விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கற்றாழை – 1
  • தயிர் – 2 டீஸ்பூன்

செய்முறை

இந்த ஆவாரம் பூ ஹேர் பேக்கை செய்வதற்கு தேவையான அளவு ஆவாரம் பூவை எடுத்து கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். அல்லது ஆவாரம்பூ பொடியை எடுத்துக் கொள்ளவும். இத்துடன் கறிவேப்பிலை, கற்றாழையை தோல் நீக்கிய பின்பு சுத்தமாக கழுவிய பின் அதை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சிறிதளவு தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்து ஒரு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். இப்போ நாம் தயார் செய்து வைத்துள்ள ஆவாரம் பூ ஹேர் பேக்கை நம் தலையில் தேய்ப்பதன் மூலம் பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வும், மீண்டும் பொடுகு வருவதிலிருந்தும் தடுக்கிறது.

இந்த ஹேர் பேக்கை நமது முடியில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு ஷாம்பு போட்டு அலசி விடவும். இந்த ஆவாரம் பூ ஹேர் பேக்கை வாரத்தில் ஒரு முறை தேய்ப்பதன் மூலம் நமது முடியின் வேர் கால்கள் உறுதியாவதற்கு உதவியாகவும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here