சவுதி அரேபியா கிளப்பில் இணைந்த ரொனால்டோ?? பளீச் பேட்டி கொடுத்த கால்பந்து வீரர்!!

0
சவுதி அரேபியா கிளப்பில் இணைந்த ரொனால்டோ?? பளீச் பேட்டி கொடுத்த கால்பந்து வீரர்!!
சவுதி அரேபியா கிளப்பில் இணைந்த ரொனால்டோ?? பளீச் பேட்டி கொடுத்த கால்பந்து வீரர்!!

நட்சத்திர கால்பந்து வீரரான ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து விலகிய பிறகு, சவுதி அரேபியா கிளப்பில் இணைந்ததாக பரவிய தகவல் குறித்து பதிலளித்துள்ளார்.

ரொனால்டோ:

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடர் காலிறுதியை எதிர்நோக்கி உள்ளது. இந்த காலிறுதியில், பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட 8 அணிகள் முன்னேறி உள்ளன. இதில், போர்ச்சுகல் அணி, இன்று சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில், அனைவரும் எதிர்பார்த்த ரொனால்டோ பிளேயிங் லெவனில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ரொனால்டோ இந்த உலக கோப்பையின் தொடக்கத்தில், மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் ஒன்று 1839 கோடி ரூபாய்க்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.

ஐபிஎல் குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு…, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பால் தேதி மாற்றமா?? முழு விவரம் உள்ளே!!

இந்த ஒப்பந்தத்தை ரொனால்டோவும் ஏற்றுக் கொண்டதாக பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல் வெளியாகி இருந்தன. இது குறித்து, சுவிட்சர்லாந்துக்கு எதிராக போர்ச்சுகல் அணி வெற்றி பெற்ற பிறகு, ரொனால்டோ நோ, நோ “its not true” என்று கூறியுள்ளார். இதிலிருந்து, ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நீங்கிய பிறகு இன்னும் எந்த ஒரு கிளப்பிற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டவில்லை என தெரிவதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here