தமிழக பொதுத்தேர்வு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85% குறைவு., ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடுபிடி!!

0
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85% குறைவு., ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடுபிடி!!
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85% குறைவு., ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடுபிடி!!

பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

பள்ளிக்கல்வித்துறை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மாணவர்களின் நலன் கருதி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர் தடை காலங்களில் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து தேர்வு எழுதி வந்தனர். தற்போது தடைகள் நீங்கி இயல்பை போல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்தும் செயல்பட தொடங்கியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் வாரந்தோறும் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களின் 2ம் பருவ தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85 சதவீதத்திற்கு குறைவாக இருந்தது.

வங்கிப் பயனர்களுக்கு ஷாக்., வட்டி விகிதம் 0.35% உயர்வு! அனைத்து வட்டி விகிதமும் உயரும் அபாயம்!!

இந்த தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள் பருவத்தேர்வில் 85% குறைவான தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்த அறிவுறுத்தினர். அதையடுத்து ஆய்வு கூட்டம் இன்று (07.12.2022) மாலை 4 மணியளவில் சென்னை அம்மா மாளிகையில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here