ராம் சரண் – உபாசனா தம்பதி வீட்டிற்கு வந்த குட்டி தேவதை.. குவியும் வாழ்த்து மழை!!

0
ராம் சரண் - உபாசனா தம்பதி வீட்டிற்கு வந்த குட்டி தேவதை.. குவியும் வாழ்த்து மழை!!
ராம் சரண் - உபாசனா தம்பதி வீட்டிற்கு வந்த குட்டி தேவதை.. குவியும் வாழ்த்து மழை!!

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ராம்சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர் மகதீரா, ரங்கஸ்தலம், ஆர்.ஆர்.ஆர் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படைப்பில் உருவாகி வரும் R15 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிய போது ராம்சரண் சினிமாவை விட்டு கொஞ்சம் brake எடுக்க போவதாக தெரிவித்தார். அதாவது அவருடைய காதல் ஆசை மனைவி உபாசனா கர்ப்பமாக இருந்ததால் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் ராம்சரணின் மனைவி உபாசனாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆத்தாடி., களவாணி பட விமலா இது., அடையாளமே தெரியாம இப்படி மாறி போய்ட்டாரே!!

ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் கல்யாணமாகி 11 வருடங்களுக்கு பின்னர் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள ராம்சரண் – உபாசனா ஜோடிக்கு பிரபலங்களும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here