
தென்னிந்திய தமிழ் சினிமாவில் இந்திய அளவில் மிகவும் டிமாண்ட் உள்ள நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். 90ஸ் இருந்து நடிப்பில் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் கொடுத்த கேரக்டரில் எல்லாம் தனது முத்திரை பதித்து தற்போது வரை சூப்பர் ஸ்டாராக களம் கண்டு வருகிறார். தற்போது நெல்சன் படைப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக 8 நாட்கள் ரஜினிக்கு கால் ஷீட் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவரை வைத்து வெறும் 3 நாட்கள் மட்டுமே சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் சைடு ஆர்டிஸ்ட் யாரும் வரவில்லை என்பதால் ரஜினி சும்மா தான் இருந்துள்ளார், இதனால் கோபப்பட்டு சென்னைக்கு கிளம்பி வந்து விட்டார் ரஜினி. இந்நிலையில் மீண்டும் ஷூட்டிங்கில் இணைய சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.