எலக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – மத்திய அரசின் அந்த முடிவால் விலை உயர்வு.., வெளியான தகவல்!!

0
எலக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் - மத்திய அரசின் அந்த முடிவால் விலை உயர்வு.., வெளியான தகவல்!!
எலக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் - மத்திய அரசின் அந்த முடிவால் விலை உயர்வு.., வெளியான தகவல்!!

தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது மோகம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் பெட்ரோல் விலையை ஒப்பிடும் போது மின்சார கட்டணம் குறைவு என்பது தான். மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் அளிக்கும் மானியம், சலுகைகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் எலக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. அதாவது மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மானியத்தை குறைக்க திட்டமிட்டு வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு FAME INDIA திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 10000 கோடி ரூபாயை மானியத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 5.63 லட்சம் ரூபாய் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் 3 சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஒரு பகுதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனை இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தலாம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜல்லிக்கட்டை தொடர்ந்து இந்த விளையாட்டை தடை செய்ய மறுப்பு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

இந்நிலையில் மத்திய அரசு இரு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தை தற்போதைய 40 சதவீத அளவில் இருந்து தடாலடியாக 15 சதவீதமாக குறைக்க உள்ளது. இப்படி மானியத்தை குறைப்பதன் மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் எலக்ட்ரிக் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மானியம் குறைத்தால் இரு சக்கரத்தின் விலை உயரும் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here