அண்ணாத்த படத்தின் புதிய சாதனை – பிரபல தனியார் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனை ஒன்றை செய்துள்ளதாக புக் மை ஷோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதனை செய்த படம்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் அண்ணாத்த.  இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரீலிஸ் ஆனது. ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த நிலையில், இந்த படம் வெளியான முதல் நாளே, 70 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ஆனால், இரண்டாவது நாள் வசூல் குறைந்த நிலையில், தற்போது வரை இந்தப்படம் 112 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது போக, கொரோனா இரண்டாவது அலைக்கு பின் வெளியான படங்களில் புக் மை ஷோ வில் 1 மில்லியன் வரை டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டு முக்கிய சாதனையை அண்ணாத்த படம் நடத்தியுள்ளதாக புக் மை ஷோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here