19 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் மோதும் ரஜினி,கமல் படங்கள்? அதுவும் அந்த பண்டிகை நாளுலயா!!

0
19 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் மோதும் ரஜினி,கமல் படங்கள்? அதுவும் அந்த பண்டிகை நாளுலயா!!
19 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் மோதும் ரஜினி,கமல் படங்கள்? அதுவும் அந்த பண்டிகை நாளுலயா!!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். தற்போது நடிகர் கமல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுபோக இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

சிரிக்க வச்சா 1 லட்சம்., முக்கிய சேனலுக்கு ஆப்பு வைக்க வந்த புதிய சேனல்!

அதுமட்டுமின்றி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், தெலுங்கில் காமெடி நடிகர் சுனில் என அனைத்து மொழியில் இருந்தும் நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படி 5 மொழி நடிகர் ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக இருந்து வரும் நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல் கமலின் இந்தியன் 2 திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படி இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும். மேலும் கடைசியாக ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படம், கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரே நாளில் மோதி கொண்டது. இந்த ரேஸில் சந்திரமுகி வெற்றி பெற்றது. சமீபத்தில் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஒரே நாளில் மோதியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here