
தமிழ் சின்னத்திரையின் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல் தான் கண்ணான கண்ணே. தந்தை மற்றும் மகளுக்கு இடையே உள்ள அழகான பந்தத்தை விளக்கி வந்த இந்த சீரியல் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது . இதில் அப்பா ரோலில் நடித்து வந்த பப்லு பிரித்விராஜ் குறித்து இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சன் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு டிஆர்பியில் மவுஸ் காட்டிவரும் சீரியல் தான் ஆனந்த ராகம். இந்த தொடர் ஒளிபரப்ப தொடங்கி கொஞ்ச நாட்களிலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இதன் ரீமேக் தெலுங்கு மொழியில் ”அர்த்தாங்கி” என்ற பெயரில் வரவுள்ளது. அதில் கேமியோ ரோலில் நடிப்பதற்காக பிரித்விராஜ் கமிட்டாகியுள்ளார்.
படுக்கையறை காட்சியில் நடித்த சீரியல் நடிகர் கதிர்.., எல்லை மீறிய படத்தால் ரசிகர்கள் ஷாக்!!
மேலும் இவருக்கு ஜோடியாக ”வித்யா no 1” மற்றும் சன் டிவியின் ”மலர்” ஆகிய இரண்டு சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வரும் நிஹாரிகா நடிக்கவுள்ளார். இப்படி சிறப்பு தோற்றத்தில் நடிக்க களமிறங்கிருக்கு பிரித்விராஜ், மீண்டும் தமிழ் சீரியல்களில் தரமான ரீ என்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.