நடிகர் மனோ பாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது – மலர் தூவி மரியாதை செலுத்திய மக்கள்!!

0
நடிகர் மனோ பாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - மலர் தூவி மரியாதை செலுத்திய மக்கள்!!
நடிகர் மனோ பாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - மலர் தூவி மரியாதை செலுத்திய மக்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமாக விளங்கியவர் தான் மனோ பாலா. பாரதிராஜா இயக்கிய புதிய வாய்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, ஆகாய கங்கையின் மூலம் இயக்குனராக தனது கெரியரை ஸ்டார்ட் செய்தார். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய மனோபாலா பிள்ளை நிலா, சிறைபறவை, கருப்பு வெள்ளை, மூடு மந்திரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து நடிப்பு மேலிருந்த மோகத்தால் நடிக்க ஆரம்பித்த அவர், நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்தார். இந்நிலையில் லியோ படத்தில் பிசியாக நடித்து வந்த நிலையில், கல்லிரலில் ஏற்பட்ட பிரச்சனையால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சரத்பாபு மரணம் குறித்து பரவி வந்த வதந்தி?? அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்த சகோதரி!!

சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காலை 11.30 மணியளவில் தொடங்கியது. மேலும் அவரது உடல் செல்லும் பாதையில் பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரின் உடல் சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here