
பொதுவாக பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று ஆசைபடுவார்கள். மேலும் அவர்களின் தலைமுடி பார்ப்பதற்கு மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அப்படிபட்ட தலை முடி பெறுவதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரு சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
- உருளை கிழங்கு – 100 கிராம்
- வாழைப்பழம் – 2
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
செய்முறை விளக்கம்;
இந்த ஹேர் பேக் செய்வதற்கு நாம் எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் சீவி கட் செய்து, ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும். இதன் பிறகு 2 வாழை பழத்தை நறுக்கி பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து, உருளைக்கிழங்கு பேஸ்டுடன் இதை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது நாம் ரெடி செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலைமுடியில் அப்ளை செய்து ஒரு 30 நிமிடங்களுக்கு பிறகு ஹேரை வாஷ் செய்து கொள்ளவும். இப்படி இந்த ஹேர் பேக்கை மாதத்தில் 2 முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் தலை முடியின் growth அதிகரிக்க உதவியாக இருக்கும்.